அபுதாபியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் கோழிக்கோடு நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் அபுதாபி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின் ஆயிரம் அடி உயரத்தில் அதன் இஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது. இதன் காரணமாக தீ குறித்து அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விமானத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இது குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் கூறியதாவது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் B737-800 விமானம் VT-AYC இயக்க விமானம் IX 348 நடுவானில் ஆயிரம் அடி உயரத்தில்  காற்றின் திசை மாறுபாடு காரணமாக என்ஜின் ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.