2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறிய சஞ்சு சாம்சன், தற்போது சிஎஸ்கே ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.
இந்த சீசனில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 304 ரன்களைக் குவித்துள்ள அவர், 169-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு அதிரடி சதங்களை அடித்து அசத்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம் சிஎஸ்கே-வின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. பேட்டிங்கில் மட்டுமின்றி, விக்கெட் கீப்பிங்கிலும் மின்னல் வேகத்தில் செயல்படும் சஞ்சு, ஐபிஎல் தொடரில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டி சாதனை படைத்துள்ளார்.
மைதானத்தில் அதிரடி காட்டும் சஞ்சு சாம்சன், மைதானத்திற்கு வெளியேயும் தனது கலகலப்பான பேச்சால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில் சிஎஸ்கே நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், தொகுப்பாளர் ஒரு இசைக் கருவியின் சத்தத்தை அப்படியே திருப்பிச் செய்யச் சொன்னார்.
ஆனால், சஞ்சு சாம்சன் சற்றும் எதிர்பார்க்காத வகையில் ஒரு பூனை கத்துவது போலச் சத்தம் எழுப்பி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்.
View this post on Instagram
“>
இந்த வேடிக்கையான வீடியோவை சிஎஸ்கே தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் “சஞ்சு பீயிங் சஞ்சு” என்று பதிவிட்டுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள், சஞ்சு சாம்சனின் இந்த ஜாலியான குணத்தை ரசித்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
