மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டம், சாவந்தவாடி தாலுகாவில் நிலத்தகராறு காரணமாக 65 வயது மூதாட்டி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சரஸ்வதி சாவந்த் என்ற அந்த பெண்மணி, தனது மகன் ஏக்நாத்துடன் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஜய் கிருஷ்ணா சாவந்த் மற்றும் அவரது மகன் ரகுநாத் ஆகியோர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றிய நிலையில், மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரஸ்வதியின் தலையிலேயே பலமாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். தனது கண் முன்னாலேயே தாய் கொல்லப்பட்டதை பார்த்த மகன் அளித்த புகாரின் பேரில், தந்தை மற்றும் மகனை போலீஸார் கைது செய்துள்ளனர். ஒரு துண்டு நிலத்திற்காக நடந்த இந்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
