பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இதனால் அந்நாடு உலக நாடுகளின் உதவியை நாடியுள்ளது. மேலும் சர்வதேச நாணய நிதியத்திடமும் பாகிஸ்தான் கடன் கேட்டது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தான் நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தையில் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனவும் வரியை அதிகரிக்குமாறும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தியது.

இதனாலேயே அந்நாட்டில் எரிபொருளின் விலை கடுமையாக உயர்ந்தது. இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது “சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு கடன் தர விதித்துள்ள நிபந்தனைகள் அனைத்தும் நினைத்து கூட பார்க்க முடியாதவை. ஆனால் வேறு வழி இன்றி நெருக்கடியை சம்பாதிப்பதற்காக தற்போது அந்த நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது” என கூறியுள்ளார்.