அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக நேற்று முன்தினம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நேற்று மதியம் அமெரிக்காவின் வான் பரப்பில் மற்றொரு உளவு பலூனும் பறந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த சம்பவத்தினால் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் மேற்கொள்ள இருந்த சீன பயணத்தை உடனடியாக ரத்து செய்தார்.

மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம உளவு பலூன் தங்கள் நாட்டு வான் பரப்பின் மீது பரந்த காரணத்திற்காக சீனாவை கடுமையாக சாடியுள்ளார். ஆனால் சீனாவோ அது உளவு பலூன் அல்ல. வானிலை ஆய்வுக்காக தாங்கள் அனுப்பிய ஒரு வின் ஓடம் தான் என விளக்கம் அளித்தது. ஆனால் இதனை ஏற்க அமெரிக்கா மறுத்து விட்டது. இந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பறந்து கொண்டிருந்த சீனாவின் உளவு பலூனை சுட்டு விழித்த அமெரிக்க ராணுவத்திற்கு அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் உளவு பலூன் ராணுவ அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.