தமிழக ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையில் பருப்பு, சீனி, கோதுமை, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் ஏழை எளிய மக்கள் இதனை வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசின் நிதி உதவியும் ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பொருட்கள் தமிழகத்தில் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார் எழுந்தது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கையில், தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் மறுக்கப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.