தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள அண்ணாமலை சென்ற மாதம் தென்காசியில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது திமுகவினர் ஊழல் பட்டியல் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளியிடப்படும் என அவர் கூறினார். அதிலும் குறிப்பாக திமுகவின் முக்கிய புள்ளிகளின் ஊழல் தொடர்பான விவரங்கள் ஆதாரங்களுடன் தமிழக மக்களிடையே வெளியிடப்படும் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஊழல் பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை ஊழல்வாதிகளோடு கூட்டணி இல்லை என கூறுவாரா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து மதுரையில் சீமான் பேசியதாவது “அண்ணாமலை வெளியிட்டது ஒன்றும் புதிய தகவல் அல்ல. திமுகவின் பட்டியலை வெளியிட்டதால், அதிமுகவில் இருப்பவர்கள் புனிதர்கள் ஆகிவிட முடியாது. அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதி என்றால் அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.