ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவின் சியாட் பகுதிக்கு அல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் 159 பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.

அப்போது 55 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் எழுந்து விமானத்தை ஜப்பானுக்கு திருப்ப வேண்டும் என்று விமான பணியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அந்தப் பயணி பணியாளரை தாக்கியதோடு கையில் பலமாக கடித்து வைத்துள்ளார்.

இதில் விமான பணியாளருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் விமானம் ஜப்பானுக்கு திரும்பியது. விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அந்த பயணி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது தனக்கு எதுவும் நினைவில்லை என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.