இன்றைய நவீன காலகட்டத்தில் நாளுக்கு நாள் அப்டேட்டுகள் அதிகரித்து வருகிறது. இதை தெரிந்து கொள்ளாவிட்டால் அதை பயன்படுத்துவது கடினமாக இருக்கும். குறிப்பாக பணம் செலுத்தும் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலியான PhonePe-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 40 லட்சத்துக்கும் அதிகமான இன்சூரன்ஸ்கள் விற்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

2021ல் காப்பீட்டு உரிமத்தைப் பெற்றதிலிருந்து இதுவரை, வாகனம், மருத்துவம், ஆயுள் காப்பீடு உள்ளிட்ட பல பிரிவுகளில் 90 லட்சத்துக்கும் அதிகமான இன்சூரன்ஸ்கள் விற்பனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்தே செல்போன் மூலம் எளிதாக இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்பதால் பலரும் இதில் இன்சூரன்ஸ் எடுத்துள்ளனர்.