புகைபிடித்தல் என்பது உடலுக்கு கேடு விளைவிக்கும் ஒரு மோசமான பழக்கம். இன்றைய காலகட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இதனை கட்டுக்குள் கொண்டு வர அரசு சார்பாக புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை நிறுத்திய பிறகு 20 நிமிடத்தில் இதயதுடிப்பு சீராகும்.

12 மணிநேரத்தில் ரத்தத்தில் உள்ள கார்பன் மோனாக்ஸைடின் அளவு சீராகும். 2 வாரத்தில் நுரையீரல் செயல்பாடு மேம்படும். 3 மாதத்தில் நுரையீரல் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும். ஓராண்டில் இதயநோய் ஏற்படும் வாய்ப்பு குறையும். 5 ஆண்டுகளில் வாய், தொண்டை கேன்சருக்கான வாய்ப்பு குறையும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.