கர்நாடக மாநிலம் சிக்மகளூர் பகுதியை சேர்ந்தவர் அசோக். இவரது ஏழு வயது மகன் சோனிஷ் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறுவனை மருத்துவமனைக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது சிறுவனுக்கு மருத்துவர் வருண் ஊசி ஒன்று போட்டுள்ளார்.

ஆனால் வீட்டிற்கு போனதும் சிறுவனின் உடல்நிலை மேலும் மோசமாகி உள்ளது. இதனால் வேறொரு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்து சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலன் இன்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இது குறித்து அசோக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தனது மகனுக்கு அதிக டோஸ் கொண்ட ஊசியை செலுத்தியது தான் மரணத்திற்கு காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வருண் ஆயுர்வேத மருத்துவம் பயின்றவர் என்றும் அவருக்கு ஊசி போடுவதற்கு அதிகாரம் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.