இன்றைய டிஜிட்டல் உலகில் மின்னஞ்சல், செல்போன் , டிஜிட்டல் பேமெண்ட்ஸ், சமூக வலைத்தளங்கள் என அனைத்திற்கும் கடவுச்சொல்லான “பாஸ்வேர்ட்” மிகவும் அவசியம். அதை கொண்டு தான் பயனர்கள் அனைவரும் அனைத்திலும் லாக்-இன் செய்ய முடியும். இந்த நிலையி இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 123456 என்ற பாஸ்வேர்டை உபயோகிப்பதாகவும், இந்தாண்டு 3.6 லட்சம் முறை இது பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் NordPass நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. Admin, Password, Pass@123 ஆகிய பாஸ்வேர்டுகளையும் அதிகம் பேர் வைத்துள்ளனர்.

இதை கணிக்கு ஒரு விநாடி கூட ஆவதில்லை என அந்நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பாஸ்வேர்டுகளை எளிதாக கண்டுபிடித்துவிட முடியும் என்பதால் தகவல்கள் திருடப்படவும் வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. நீங்களும் இந்த பாஸ்வேர்டு வைத்திருந்தால் உடனே மாற்றிவிடுங்கள்.