நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இணைய மோசடி வலைகளில் சிக்காமல் இருக்க பொதுமக்கள் இவற்றை பின்பற்றுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, சமூகவலைதளங்களில் அறிமுகம் இல்லாதவர்கள் அழைப்புகளை ஏற்க வேண்டாம்.

தனிப்பட்ட விவரங்களான வீட்டு முகவரி, மொபைல் எண்களை பகிர வேண்டாம். லொகேஷன் சர்வீஸ்களை ஆப் செய்து கொள்ளுங்கள். பிரைவசி அமைப்பை மாற்றுவதுடன், சமூகவலைதளங்களில் உள்நுழைய வலுவான பாஸ்வேர்டுகளை அமைத்து கொள்வது அவசியம்