சந்தையில் கலப்படமற்ற உணவுப் பொருட்களைப் பெறுவது இன்று பெரும் சவாலாக மாறியுள்ளது. குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் ரசாயன கலப்பு மற்றும் போலி தயாரிப்புகள் குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. இதற்கிடையில், சமூக ஊடகங்களில் தற்போது “போலி முட்டைக்கோஸ்” பற்றிய ஒரு வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

@mantubabita என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், சில ரசாயனப் பொருட்களின் உதவியுடன் முட்டைக்கோஸ் போல் தோற்றமளிக்கும் காய்கறி எவ்வாறு சில நிமிடங்களில் உருவாக்கப்படுகிறது என்பதைக் காட்டுகிறது. வீடியோவில் அந்த நபர், தயாரிக்கப்பட்ட “போலி முட்டைக்கோஸ்” ஒன்றை வெட்டி காட்டி, அது உண்மையான காய்கறியிலிருந்து வேறுபாடு தெரியாத அளவுக்கு இயல்பாக இருப்பதை விளக்குகிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mantu&babita yadav (@mantubabita)

மக்கள் இதுபோன்ற போலி உணவுப் பொருட்களைப் பற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். பீட்சா, பர்கர், சௌ மெய்ன் போன்ற உணவுகளில் பெரும்பாலும் முட்டைக்கோஸ் சேர்க்கப்படுகிறது. எனவே இது கவலைக்குரியது,” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ 1.7 மில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. ஆனால் கருத்துப் பிரிவில் பலரும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளனர். சில பயனர்கள், இது உணவுக்காக அல்லாமல் காட்சிப் பொருளாக (Display Material) உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறினர். ஒரு பயனர், அது உணவாக அல்ல, மாதிரி காட்சிக்காக தயாரிக்கப்பட்டது, மேடம்,” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “இது ஹோட்டல் மெனுக்களில் அலங்கார காட்சிக்காகப் பயன்படுத்தப்படும் பொருள் தான்,” என்று விளக்கமளித்துள்ளார்.

இவ்வாறு விளக்கங்கள் வந்தாலும், பல நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். “இத்தகைய போலி காய்கறிகள் நம் சமையலறைகளுக்கே வரக்கூடும்” என்ற அச்சத்தையும் பலர் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் உணவுப் பொருட்களை வாங்கும் போது நம்பகமான கடைகள் மற்றும் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளனர்.