
மத்திய அரசன் கூட்டுறவின் மூலம் செழிப்பு என்ற திட்டத்தை நனவாக்கும் விதமாக மத்திய அமைச்சரும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷாவின் முயற்சியால் கூட்டுறவு துறையில் 1100 புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று சமீபத்தில் முடிவெடுக்கப்பட்டது. 13 கோடி விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள நிலையில் இந்த விவசாயிகள் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்களை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித்ஷா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்தல் குறித்த மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் மூலம் தொடக்க வேளாண்மை கடன் சங்கங்களை வழிப்படுத்தும் வழிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.