குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலா. இவர் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துவருகிறார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கினார். இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்கு சின்னத்திரை நடிகர் KPY பாலா, இன்று இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார்.
நடிப்பதோடு நின்றுவிடாமல், சமூக சேவையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் பாலா, ஆம்புலன்ஸ், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், முதியோருக்கு இலவச ஆட்டோ என அடுத்தடுத்து தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். எளிய மக்களுக்கு ஓடோடி சென்று உதவும் பாலாவுக்கு பாராட்டுகள் குவிகிறது.
