அஜித்துடன் அடுத்தபடம் என்ற ஆசையில் இருந்த விக்னேஷ் சிவனுக்கு அந்த படம் கைகொடுக்காததால் லவ் டுடே பிரதீப் ரங்கநாதனைவைத்து LIC என்ற படத்தை இயக்கி வருகிறார். LIC என்ற தலைப்பிற்கு பிரச்சனை வந்தாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதற்காக வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் யாருக்குமே கிடைக்காத படப்பிடிப்பு அனுமதி விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது.

பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பாவாக நடிக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரமாதமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பகுதியில் படப்பிடிப்பு பாக்கி இருப்பதால் மீண்டும் அங்கே சீமான் செல்லவிருப்பதாகவும் அப்போது ஜாக்கி வாசுதேவுடன் சந்திப்பு நிகழலாம் என கூறப்படுகிறது.