தர்மபுரி மாவட்டத்தில் அரங்கேறியுள்ள இந்த கொடூரச் சம்பவம் மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வரும் அய்யப்பன் என்பவர், தனது இரண்டாவது மனைவியின் பெண் குழந்தையைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். தனது தனிப்பட்ட உல்லாசத்திற்கும், சுகபோக வாழ்விற்கும் அந்தச் சிறுமி தடையாக இருப்பதாகக் கருதிய அய்யப்பன், ஈவுஇரக்கமே இல்லாமல் குழந்தையின் உடலில் ஆங்காங்கே சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார்.

​இந்தக் கொடுமையால் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட குழந்தை, தற்போது தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்துத் தகவலறிந்த குழந்தையின் தாய் ரமணி, உடனடியாக மருத்துவமனைக்கு வந்து தனது குழந்தையின் நிலையைக் கண்டு கதறித் துடித்தார். இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீஸார் விரைந்து செயல்பட்டு அய்யப்பனை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.