இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணரும், இங்கிலாந்து மேலவையின் உறுப்பினருமான மேக்நாத் தேசாய் (வயது 85) செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
“சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர் மற்றும் பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் ஜியின் மறைவால் மிகுந்த வேதனையடைந்துள்ளேன். அவர் இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர். இந்திய கலாச்சாரத்துடன் அவரின் பிணைப்பு என்றும் வலிமையானதாக இருந்தது” என பிரதமர் X – வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
Anguished by the passing away of Shri Meghnad Desai Ji, a distinguished thinker, writer and economist. He always remained connected to India and Indian culture. He also played a role in deepening India-UK ties. Will fondly recall our discussions, where he shared his valuable… pic.twitter.com/q1cv3DAXaw
— Narendra Modi (@narendramodi) July 29, 2025
“>
குஜராத்தைச் சேர்ந்த மேக்நாத் தேசாய், The Rediscovery of India உள்ளிட்ட முக்கிய நூல்களை எழுதியவர். 2020-ஆம் ஆண்டு, தொழிலாளர் கட்சியின் உறுப்பினராக இருந்த அவரால், கட்சிக்குள் யூத விரோதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாததை காரணமாகக் கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இவரது மறைவு, இந்திய அறிவார்ந்த வட்டாரத்தில் ஒரே நேரத்தில் பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
