மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், மெக்சிகோவின் காபோ சான் லூகாஸ் கடற்கரையில் இரண்டு ராட்சத ‘ஒயிர்ஃபிஷ்’ (Oarfish) கரை ஒதுங்கியுள்ள வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மீன்களை ஜப்பானிய புராணங்களின்படி ‘அழிவின் மீன்கள்’ (Doomsday Fish) என்று அழைக்கிறார்கள். இவை ஆழ்கடலில் வசிப்பவை என்பதால், இவை கரைக்கு வருவது நிலநடுக்கம் அல்லது சுனாமி போன்ற பெரிய இயற்கைச் சீற்றங்களுக்கான முன்னெச்சரிக்கை அறிகுறி என்று நம்பப்படுகிறது.
Two massive deep-sea oarfish recently washed ashore in Cabo San Lucas, Mexico.
According to legend, this rare creature, often called the “doomsday fish,” only rises from the depths of the ocean when a major disaster is about to happen. pic.twitter.com/BcQfMNnkdh
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) March 9, 2026
ஏற்கனவே ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடுமையான போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்த மீன்கள் தென்பட்டது மக்களிடையே கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. “இந்த மீன்களை மீண்டும் கடலுக்குள் தள்ளுவது என்பது அழிவிற்கான ‘ஸ்னூஸ்’ (Snooze) பட்டனை அழுத்துவது போன்றது” என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆழ்கடல் அழுத்தத்தில் வாழும் இந்த மீன்கள் கரைக்கு வருவது உலக அழிவின் தொடக்கமா என சமூக வலைதளங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
