விழுப்புரம் மற்றும் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் சஞ்சு சாம்சனுக்கு, அவரது ரசிகர்கள் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசி சாதனை படைத்ததைத் தொடர்ந்து, அவரது புகழும் ரசிகர் பட்டாளமும் முன்பை விடப் பலமடங்கு அதிகரித்துள்ளது.
இதனைத் திருவிழா போலக் கொண்டாடும் வகையில், கேரளாவில் அவரது தீவிர ரசிகர்கள் சுமார் 40 அடி உயரத்தில் அவருக்குப் பிரம்மாண்டமான கட்-அவுட் ஒன்றை அமைத்துள்ளனர். இந்த அசத்தலான வரவேற்பு குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த 40 அடி உயர கட்-அவுட், சஞ்சு சாம்சனின் அசுரத்தனமான பேட்டிங் திறமைக்கும், அவர் மீது ரசிகர்கள் வைத்துள்ள எல்லையற்ற அன்பிற்கும் சான்றாக அமைந்துள்ளது. பொதுவாகத் தென்னிந்தியாவில் முன்னணி சினிமா நடிகர்களுக்கே இது போன்ற பிரம்மாண்ட கட்-அவுட்கள் வைக்கப்படுவது வழக்கம்.
ஆனால், தற்போது ஒரு கிரிக்கெட் வீரருக்கு, அதுவும் சஞ்சு சாம்சனுக்கு இவ்வளவு பெரிய கௌரவம் அளிக்கப்பட்டது விளையாட்டு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க அவர் மேற்கொண்டு வரும் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அவரது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
