பிரான்ஸ் நாட்டை சேர்ந்த லூயிஸ் உய்ட்டன் என்ற நிறுவனம் ஆடம்பர பொருட்கள் விற்பனைக்கு பெயர் போனது. இந்த நிறுவனத்தில் பேக், பெல்ட்டுகள் மற்றும் ஆடைகள் போன்ற பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாகவே இந்த நிறுவனத்தின் பொருள்கள் விலை உயர்ந்ததாக தான் இருக்கும். இந்த நிறுவனத்தில் வாங்குவதற்கு உலகம் முழுவதும் பெரிய வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் கொண்டு வந்த இயர் போன் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடந்த மார்ச் மாதம் இந்த நிறுவனம் புதிய ஒயர்லெஸ் இயர்போனா ஹாரிசன் லைட் அப்பை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த இயர் போனின் விலை 1660 டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் 1.38 லட்சம் ஆகும். இந்த இயர் போனில் இயர்பட்கள் இலகுரக அலுமணியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்துபவர் ஒரே நேரத்தில் இரண்டு ஆடியோவை stream செய்ய முடியும். 28 மணி நேர பேட்டரி நீடிக்கும் வசதி உள்ளது. இந்த கேஸ் பவர் பேங்க் ஆக பயன்படுகிறது. மேலும் Active noise-cancelling, அழைப்புகளுக்கான பின்னணி இரைச்சலை நீக்கும் Microphone மற்றும் Bluetooth Multi Band போன்றவை உள்ளது.