அமெரிக்காவின் மிச்சிகனை சேர்ந்தவர் எரின் ஹனிகட். இந்த பெண் மிக நீளமான தாடியுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 38 வயதான எரின் கடந்த இரண்டு வருடங்களாகவே இடைவிடாமல் தொடர்ந்து தாடி வளர்த்து வருகிறார். தற்போது அவரது தாடி 30 செ.மீ. அளவில் உள்ளது.

இதன் மூலம் உலகிலேயே  மிக நீளமான தாடியுடன் வாழும் பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். எரினின் முடி வளர்ச்சி பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) இந்த தாடி வளர காரணமாக உள்ளது. இதுபோன்று ஒருசில பெண்களுக்கு மீசை வளர்வதும் குறிப்பிடத்தக்கது.