உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ உதவியுடன் ரஷ்யாவுக்கு உக்ரைன்  பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்கள் மூலம் அதிக அளவில் தாக்குதலை நடத்தி வருகிறதுஉக்ரைன்.  ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் தாக்குதலை நடத்தியதற்கு ரஷ்யா ஏவுகணை தாக்குதலை பதிலடியாக கொடுத்துள்ளது.

கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை ரஷ்யா இரண்டு ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதில் குடியிருப்பு கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு ஆறு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உக்ரைனிடம் இருந்து டொனேட்ஸ்க்கு பகுதியை கைப்பற்றிய ரஷ்யா அதை தங்கள் பகுதியாக அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இந்த பிராந்தியத்தின் பகுதி ஒன்றில் உக்ரைன் அமெரிக்கா கொடுத்த கிளஸ்டர் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஆறு பேர் படுகாயம் அடைந்து ஒருவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.