நைஜீரியாவில் உள்ள கடுனா மாகாணத்தின் மசூதி ஒன்றில் நூற்றுக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்த தகவல் அறிந்து மீட்பு குழுவினர் விரைந்து  இடுப்பாடுகளில் சிக்கியவர்களை மீட்டதில் ஏழு பேர் உயிரிழந்தது தெரிய வந்தது.

23 பேர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1830 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த மசூதியின் விபத்து இதயத்தை உடைத்துள்ளது. இந்த பேரழிவு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கடுனா கவர்னர் உபாசானி தெரிவித்துள்ளார்.