தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு ஆண்டு ஐடியை படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இணையதளம் மூலமாக மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம் 150 ரூபாய். இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.