சமூக ஊடகங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பெரும்பாலும் மக்களிடம் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன. சமீபத்தில், இதேபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், சிறுத்தை ஒன்று வழக்கத்திலிருந்து விலகி ஒரு தனித்துவமான இரையை பிடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பொதுவாக சிறுத்தைகள் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகளை வேட்டையாடுவதை நாம் அறிந்திருப்போம். ஆனால் இந்த வீடியோவில், சிறுத்தை ஒருவர் “உலகின் மிகப்பெரிய எலி” என அழைக்கப்படும் கேபிபரா ஒன்றை வேட்டையாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
— Damn Nature You Scary (@AmazingSights) September 17, 2025
20 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, சமூக ஊடக தளமான ‘X-இல் @AmazingSights என்ற கணக்கிலிருந்து பதிவேற்றம் செய்யப்பட்டு, குறுகிய நேரத்தில் 53,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. அதில் , ஒரு கேபிபரா ஆற்றங்கரையில் சுதந்திரமாக உணவு தேடி அலைந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஒரு சிறுத்தை பாய்ந்து வந்து, கேபிபராவை பலத்தோடு பிடித்தது. தப்பிக்க கேபிபரா போராடியபோதும், சிறுத்தையின் வலிமையான பிடியில் இருந்து மீள முடியாமல் போனது. சில நொடிகளில், சிறுத்தை அந்த இரையை புதர்களுக்குள் இழுத்துச் செல்லும் காட்சியுடன் வீடியோ முடிகிறது.
கேபிபரா என்பது தென் அமெரிக்காவில் காணப்படும் ஒரு வகை கொறித்துண்ணி. இது உலகின் மிகப்பெரிய எலி என்றும் கருதப்படுகிறது. சராசரியாக 4 அடி நீளம், 60 கிலோகிராம் வரை எடை கொண்டிருக்கும் கேபிபரா, தோற்றத்தில் சிறிய பன்றியைப் போன்ற தோற்றமளிக்கிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்
