ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்குப் பொறுப்பெடுத்ததாக லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) முதலில் அறிவித்திருந்தது. ஆனால் பின்னர் அந்த அறிக்கையை TRF விலக்கிக் கொண்டது.
இந்நிலையில், இந்தியா தொடர்ந்து பாகிஸ்தான் தான் TRF அமைப்பின் மூலம் இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பதாக குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலளித்த பாகிஸ்தானின் துணை பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், TRF ஒரு சட்டவிரோத அமைப்பாக கருதப்படுவதில்லை என்றும், தாக்குதலில் அந்த அமைப்புடன் தொடர்புடையதாக இந்தியா கூறும் அளவுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், இந்தியா TRF தொடர்பில் தகவல்கள் இருக்குமெனில், அதை பாகிஸ்தானிடம் பகிர வேண்டும் எனவும் சவால் விட்டார்.
Pak Deputy PM Ishaq Dar rejected TRF involvement in the Pahalgam attack and said :
‘Alhamdulillah we are the non permanent member of UNSC…..we don’t consider TRF as illegal…show the evidence that TRF has carried out the Pahalgam attack or show the ownership of TRF… We… pic.twitter.com/qLwDAC4zVy
— OsintTV 📺 (@OsintTV) July 18, 2025
“>
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கடந்த வாரம் TRF அமைப்பை அதிகாரப்பூர்வமாக ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. TRF அமைப்பு, பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பாவின் மறைமுகக் கிளையாக இருந்தாலும், பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்து இந்த அமைப்பின் செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தியாவின் குற்றச்சாட்டு மற்றும் பாகிஸ்தானின் மறுப்பு ஆகியவை இரு நாடுகளுக்கிடையேயான பனிப்போரினை மேலும் தீவிரமாக்கியுள்ளன.
