மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்த பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பாஜகவுடன் டெல்லியில் பேச்சுவார்த்தையை முடித்த அன்புமணி இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் பேச உள்ளார். இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பை அவர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாமகவுக்கு 8 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை இடங்களை ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.