காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்றும், கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவோம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் மீறி கர்நாடக அரசு தான்தோன்றித்தனமாகச் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, தனது அதிகாரத்தைத் தக்கவைக்க மாநிலத்தின் உரிமைகளைக் கர்நாடகத்திடம் அடகு வைத்துவிடுமோ என்ற அச்சம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆட்சி அதிகாரத்தை விட விவசாயிகளின் வாழ்வாதாரமே முக்கியம் என்பதை உணர்ந்து, கர்நாடக அரசின் இத்தகைய நடவடிக்கைகளை அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் முதலமைச்சர் விஜய் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.