கிருஷ்ணகிரி கேஆர்பி அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டி உள்ளதால் அதிலிருந்து 600 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட ஐந்து மாவட்ட பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் ஆற்றல் யாரும் கடக்கவும்,குளிக்கவும் கூடாது என்றும் கால்நடைகளை ஆற்றில் மேய்ச்சலுக்கு விடக்கூடாது என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.