தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய காலத்தில் மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி மாதம் 14 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் சுமார் 2300 ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களுக்கு அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க முடியாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற செவிலியர் சங்கம் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அதற்கு பதில் அளித்த தமிழக அரசு, அவ்வளவு ஊதியம் வழங்க முடியாது, காலியாக இருக்கும் 1283 பணியிடங்களையும் ஒப்பந்த செவிலியர்களைக் கொண்டே நிறைவேற்றுவோம் என்று அரசு தெரிவித்துள்ளது.