
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர் அக்கம் பக்கத்தில் பேச்சைக் கேட்டு மேக்காமண்டபம் பகுதியில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ சபைக்கு வழிபாட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது மத போதகரான ரெஜிமோன் கூறியபடியே சில வழிபாடுகளை செய்துள்ளார். அவர் மாத மாதம் வருமானத்தில் பத்து சதவீதம் காணிக்கையாக செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். அவர் கூறியபடியே சில நாட்கள் கழிந்தது. ஆனால் இளம்பெண்ணின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
அப்போது மத போதகர் நீ உன் கணவருடன் உறவு கொள்ளக்கூடாது. உன் கணவனின் விந்துவில் விஷம் நிறைந்துள்ளது. அதற்கு பதிலாக முழு ஆசியைக் கொண்ட என்னுடன் உறவு கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என கூறி இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்றதாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண் அவரிடம் இருந்து தப்பித்து வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரெஜிமோனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.