கேரள மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் ஜோசப் (62)- ஷீபா(58). இவர்கள் காரில் செத்திப்புழை பகுதியில் இருந்து இருந்து மான்வெட்டம் பகுதிக்கு கூகுள் மேப் காட்டிய வழியிலேயே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த பாதை முழுக்க மழை வெள்ளம் சூழ்ந்து இருந்ததால் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காரில் பயணம் செய்த ஜோசப், அவரது மனைவி ஷீபா ஆகிய இருவரையும் காப்பாற்றியதால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
