எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக் குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கின் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வெற்றியாகவும் பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பொதுக்குழு செல்லும் என மட்டுமே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அந்த பொழுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது இன்னும் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆகவே அது தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் தான் உள்ளது என விளக்கம் அளித்துள்ளார்.