கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று (நவம்பர் 3) சென்னையில் மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ. 40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,350-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.90,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையைப் போலவே, வெள்ளியின் விலையும் கிராமிற்கு ரூ. 2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.168-க்கும், ஒரு கிலோ ரூ.1,68,000-க்கும் விற்பனையாகிறது. சந்தை நிலவரப்படி, வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் உயரவே வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.
