உத்தரப் பிரதேச மாநிலத்தின் கவுசாம்பி மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம், காதல் திருமணங்களைத் தொடர்ந்து எதிர்கொள்ளும் சமூக அழுத்தங்கள் எவ்வளவு பயங்கரமானதாக இருக்க முடியும் என்பதற்கான சோகமான உதாரணமாக அமைந்துள்ளது.

22 வயதான அங்குல் சரோஜ் என்ற இளைஞர், தனது காதலியை பெற்றோர் எதிர்ப்பை மீறி நான்கு மாதங்களுக்கு முன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பைப் பெற்றது. திருமணத்தின்போது இருவரும் மகிழ்ச்சியுடன் இருப்பது காணொளியில் தெளிவாக காணப்பட்டது.

“>

 

ஆனால் நேற்று இரவு, அதே பெண்ணின் குடும்பத்தினர் ஏதோ ஒரு காரணம் கூறி அங்குலை அழைத்துச் சென்று, திட்டமிட்டு அவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர். இளம் வயதிலேயே தனது காதலுக்காக பரிதாபமாக கொலை செய்யப்பட்ட  அங்குலின் மரணம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரச் செயலை கண்டித்த பலர்  தங்களது வருத்தத்தை ஆவேசத்துடன் கண்டித்து வருகின்றனர்.  தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.