வகுப்பறையில் பாடம் படிக்கச் சொன்ன ஆசிரியருக்கு, மழலை மொழியில் சிறுவன் ஒருவன் விடுத்த மிரட்டல் வீடியோ தற்போது இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆசிரியர் ஒருவர் ஒரு சிறுவனிடம், “தம்பி, ஒழுங்காகப் படி… புத்தகத்தை எடுத்து வாசி” என்று அன்பாகக் கூறுகிறார். இதைக் கேட்டவுடன் அந்தச் சிறுவன் அழத் தொடங்குகிறான். அழுதுகொண்டே திடீரென ஆசிரியரைப் பார்த்து, “போங்க… அதிகமா பேசாதீங்க… அப்புறம் உங்க ஸ்கூலையே இடிச்சு தரைமட்டம் ஆக்கிடுவேன்” என்று மிரட்டல் விடுக்கிறான்.
Wholesome Kalesh b/w Student and Teacher (When the teacher asked the kid to study, he replied, “i will break your school!” and the whole class burst out laughing) pic.twitter.com/iJBhvibY8l
— Ghar Ke Kalesh (@gharkekalesh) April 29, 2026
சிறுவனின் இந்த மிரட்டலைக் கண்டு ஆசிரியர் ஒரு நிமிடம் திகைத்துப் போனார். பின்னர் அவனது வெகுளித்தனமான பேச்சைக் கேட்டு ஆசிரியரும், அருகில் இருந்த மாணவர்களும் சிரிக்கத் தொடங்கினர். எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “இந்தப் பையன் எதிர்காலத்தில் பெரிய டானாக வருவான் போலிருக்கே!”, “இப்படியொரு வெகுளித்தனமான சண்டையை தினமும் பார்க்கலாம்” என வேடிக்கையாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிறுவனின் இந்த கியூட் ரவுடிசம் தற்போது இணையவாசிகளின் மனதைக் கவர்ந்து வருகிறது.
