தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னி அரசுக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் வன்னி அரசு தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தள பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், “அண்ணன் ஸ்டாலின் அவர்கள் இன்று மதியம் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அன்போடு வாழ்த்தினார் என்றும், இந்த புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று அவர் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக மற்றும் விசிக இடையே தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு விவாதங்களும் மோதல்களும் நிலவி வரும் வேளையில், புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள வன்னி அரசுக்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் போன் செய்து வாழ்த்து கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
