உங்களின் ஸ்மார்ட் போன் நீண்ட நாட்கள் நீடிப்பதற்கு சில டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும்.

அதாவது ஸ்மார்ட் போன் வாங்கியதும் செய்ய வேண்டிய முதல் வேலை தப்பி தவறி கீழே விழுந்தால் உடையாதவாறு பேக்கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை உடனடியாக பொருத்த வேண்டும்.

மொபைல் போன் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் என்றால் அடிக்கடி போனை சுத்தம் செய்ய வேண்டும். மென்மையான துணியை பயன்படுத்தி போனின் ஸ்கிரீனை துடைக்கவும் மற்றும் தூசிகள் ஆகியவற்றை நீக்க வேண்டும்.

உங்கள் மொபைல் போனை நேரடியாக சூரிய ஒளி படும் படி வைக்கக் கூடாது. கடுமையான குளிரும் உங்கள் மொபைல் போன் பேட்டரியை தற்காலிகமாக குறைக்கும். எனவே மிதமான வெப்ப நிலையில் எப்போதும் போனை வைத்திருக்க வேண்டும்.

மொபைல் போன் பேட்டரி நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் என்றால் முறையாக சார்ஜ் செய்ய வேண்டும்.. அதாவது முழுமையாக சார்ஜ் தீரும்வரை மொபைல் போனை பயன்படுத்தக் கூடாது. அதனைப் போலவே 100% முழுவதும் சார்ஜ் செய்யாமல் இருவது முதல் 80 சதவீதம் இதற்கு இடைப்பட்ட அளவு வரை சார்ஜ் செய்ய வேண்டும். போனில் 20 சதவீதம் காட்டும் போது உடனே சார்ஜ் போட்டு விடுங்கள். 80 சதவீதம் வந்ததும் சார்ஜ் எடுத்து விட வேண்டும்.

மொபைல் போனில் ஸ்டோரேஜ் சரியாக பராமரிக்க வேண்டும். மொபைலில் ஸ்டோரேஜ் அடைத்துக் கொண்டிருக்கும் தேவையில்லாத புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டும் செயலிகளை அவ்வபோது அழித்து விட வேண்டும்.

உங்கள் மொபைல் போன் கீழே விழுந்து நொறுங்கி விடாமல் கவனமாக வைத்திருக்க வேண்டும். போனின் மீது கனமான பொருள் அல்லது கவனம் இல்லாமல் ஃபோனின் மீது உட்காருவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மொபைல் போனின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் செயலிகளை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். தானாகவே அப்டேட் ஆகும் படியாக அல்லது அப்டேட் குறித்த தகவல்கள் தெரிந்ததும் உங்கள் போனின் சாஃப்ட்வேரை புதிதாக அப்டேட் செய்ய வேண்டும்.

இந்த வழிமுறைகளை பின்பற்றினால் மட்டும் போதும் உங்கள் போன் நீண்ட நாட்களுக்கு நன்றாக பழுதடையாமல் இருக்கும்.