XAi  என்ற புதிய நிறுவனம் ஒன்றை எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளார். 

உலகின் நம்பர் 1 பணக்காரான எலான் மஸ்க் வித்தியாசமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்  என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரது வித்தியாசமான யோசனைகளால் பல பாராட்டுகளை பெற்றுள்ளார். பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். அதே சமயத்தில், சில செயல்பாடுகளால்  கேலி கிண்டலுக்கு உள்ளானதும் உண்டு. அந்த வகையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம். வாட்ஸ் அப் உள்ளிட்ட பல செயலிகளுக்கு சொந்தக்காரரான Zuck -க்கும் எலான் மஸ்க்கும் இடையில் சில காலமாக மோதல் நிலவி வருகிறது.

இந்த மோதலைத் தொடர்ந்து, Zuck  ட்விட்டருக்கு போட்டியாக Thread  என்ற செயலியை சமீபத்தில் உருவாக்கியிருந்தார். தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எலான்  மஸ்க் புதியதாக XAi என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதனுடைய குறிக்கோள், பிரபஞ்சத்தின் இயற்கையான யதார்த்தத்தை  அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.

இந்த நிறுவனம் மூலம் எலான் மஸ்க்  என்ன செய்ய காத்திருக்கிறார் என்ற கேள்வி தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்திற்கான அதிகாரப்பூர்வ ட்விட்டர்  கணக்கு தொடங்கப்பட்டு சில மணி நேரங்களிலேயே பல லட்சம் followersகளை  பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.