பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் அனிருத்தாச்சார்ய ஜி மகராஜ், தனது நகைச்சுவையான பேச்சால் சமூக வலைதளங்களில் எப்போதும் வைரலாக இருப்பவர். சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் பக்தர் தனது கணவர் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதாகவும், அவரை எப்படி திருத்துவது என்றும் அவரிடம் ஆலோசனை கேட்கிறார்.
இதற்கு மகராஜ் தனது பாணியில் மிகவும் வேடிக்கையான பதிலளித்துள்ளார். கணவருக்கு கோபம் வரும்போது டென்ஷன் ஆகாமல், அவருக்கு “மிலே ஹோ தும் ஹம்கோ படே நசீபோன் சே…” (உங்களை நான் பெரும் அதிர்ஷ்டத்தால் அடைந்துள்ளேன்) என்ற பாடலை பாடுங்கள் என்று அவர் சிரித்துக் கொண்டே கூறினார்.
View this post on Instagram
“>
இந்த நகைச்சுவையான ஆலோசனையைக் கேட்டு அங்கிருந்த மக்கள் அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறுகிய காலத்திலேயே 3 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
மேலும் வாழ்க்கையில் எதற்கும் கவலைப்படாமல், கோபப்படுபவர்களையும் சிரிப்பால் கையாள வேண்டும் என்ற கருத்தை அவர் இந்த வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளார். 12 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ள இந்த வீடியோ, நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
