தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலை தடுக்கவும் தொடர்ந்து உயர் கல்வி பயிலவும் பல்வேறு திட்டத்தின் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களையும் ஊக்குவித்து வருகிறது.  அந்த வகையில் 2023 ஆம் வருடம் 12ஆம் வகுப்பு முடித்து நடப்பாண்டு கல்லூரியில் சேராத தமிழக மாணவர்களின் பெற்றோருக்கு அமைச்சர் நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அதாவது திருச்சியை சேர்ந்த மாணவியின் அப்பாவிடம் பேசிய அமைச்சர் பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருக்கும் உங்களுடைய மகளை ஏன் கல்லூரியில் சேர்க்காமல் இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அந்த மாணவியின் தந்தை படிக்க வைக்க வசதி இல்லை என்று கூறியுள்ளார். வறுமை காரணம் காட்டி பிள்ளைகளின் படிப்பை நிறுத்தக்கூடாது. உங்கள் குழந்தை படிக்க விரும்பும் பாடம் குறித்து ஒரு மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்கும்படி கூறியுள்ளார். பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டியது அரசின் பொறுப்பு என்றும் திருச்சிக்கு வரும் பொழுது நேரில் சந்தித்து பேசும்படியும் கூறியிருக்கிறார்.