கரூர் மக்கள் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் விஜய் சம்பவ இடத்திற்குச் செல்லாததற்குக் காரணமாக, ‘விஜய் அங்கு சென்றால் கூட்டம் கூடும்’ என்ற ஒற்றைப் பதிலைத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) தொடர்ந்து கூறி, இன்றுவரை அதையே முட்டுக் கொடுத்து நிலைநிறுத்தி வருகின்றனர். இந்தச் சப்பைக்கட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, ஒரு பிரபல அரசியல் விமர்சகர் தவெக-வினருக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. “சரி, விஜய்க்குத்தானே கூட்டம் வரும்? அப்படியானால் ஆதவ் அர்ஜுனா போன்ற முக்கிய நிர்வாகிகள் நீங்கள் சென்றிருக்கலாமே? உங்களைப் பார்க்க எந்தக் கூட்டம் வரப்போகிறது? அல்லது கட்சியின் மற்ற முக்கிய நிர்வாகிகள் யாராவது சென்றிருக்கலாமே, அவர்களைப் பார்க்கக் கூட்டம் வரப்போகிறதா?” என்று அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
விமர்சகர் தனது கேள்வியைத் தொடர்கையில், விஜய்க்கு கூட்டம் வருமெனில், அந்தக் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, விஜய் அவர்களின் ஆலோசனையின் படி, தவெக-வின் முக்கிய நிர்வாகிகள் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகக் களத்தில் இறங்கி, துணை நின்றிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அதைச் செய்யத் தவறியது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன்மூலம், கூட்டம் கூடும் என்ற காரணத்தைச் சொல்லி, மக்கள் துயரத்தில் பங்கேற்பதைத் தவெக தரப்பினர் தவிர்த்துவிட்டனர் என்றும், இது மக்கள் பிரச்சினைகளுக்கான அக்கறையின்மை என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். தவெக-வின் அரசியல் நகர்வுகள் ஆரம்பத்திலேயே மக்கள் பிரச்சினைகளுக்கான உண்மையான அர்ப்பணிப்பைக் காட்டத் தவறிவிட்டன என்ற குற்றச்சாட்டையும் விமர்சகர் முன்வைக்கிறார்.
ஏன்டா தடிமாடே விஜய்க்கு தான் கூட்டம் கூடும் சரி
உனக்கு கூட்டமாடா கூடும் ? நீ ஏன்டா ஓடுன
நீ மாவீரன் தானே எதுக்குடா ஓடுனேன்னு சில்பா குமாரை போட்டு பிரட்டி எடுத்து இருக்காப்ல 💥💥
இன்னா மிதிடா சாமி pic.twitter.com/lKq4vJ2Aqd
— சிலுவை (@SiluvaM_) November 5, 2025
