தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுன், “யார் உண்மையான ரவுடி என்பதை அடுத்த ஆறு மாதத்தில் பார்ப்பீர்கள்; யார் கையில் அதிகாரம் இருக்கும் என்பதைப் பார்க்கத்தான் போகிறீர்கள்” என்று ஆக்ரோஷமான ‘ரவுடி’ வசனம் பேசியது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. ஆதவ் அர்ஜுனின் இந்த ‘வீர வசனத்தை’ பலரும் கிண்டலடித்தும், இதற்கு எதிரான கருத்துகளையும் பதிவிட்டும் வருகின்றனர். இந்தச் சூழலில், ஒரு காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தவெக-வினரின் பேச்சை மேலும் கிண்டலுக்கு ஆளாக்கியுள்ளது.
அந்த வைரல் வீடியோவில், சாதாரணமாக நடந்து வரும் ஒரு நபரைக் கண்ட எதிரே இருக்கும் ஒருவர், அவரை ‘ரவுடி’ போல சித்தரித்து, புகழ்ந்து வர்ணிப்பார். அதை உண்மை என நம்பும் அந்த நபர், உற்சாகமடைந்து கோமாளித்தனமான செய்கைகளில் ஈடுபடுவார். இந்த வீடியோவை இணைத்தே தற்போது பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, ஆதவ் அர்ஜுனன் பேசி வருவது போல, தங்களை யாரும் ரவுடி என்று சொல்லாமல், தவறான வீர வசனங்கள் மூலம் தங்களைத் தாங்களே ‘ரவுடி’ எனக் கூறிக்கொண்டு, அதை உண்மை என நம்பி தமிழக வெற்றிக் கழகத்தினர் சுற்றித் திரிவதாக இந்தக் கிண்டல் வீடியோ மூலம் நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். த.வெ.க.வின் ஆக்ரோஷமான அரசியல் ஆரம்பத்திலேயே நகைச்சுவைக்கு உள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
6 மாசத்துல யாரு ரெளடின்னு காட்றோம் https://t.co/6thBPlCHh9 pic.twitter.com/C4NFDGH2t1
— Villainism (@Karuppu_7) November 5, 2025
