
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் விஜய் அரசியல் எதிரியாக திமுகவையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் அறிவித்துள்ள நிலையில் பெயர் சொல்லாமல் தான் இதுவரை விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் ஆதரவாளர் ஒருவர் கொடுத்த பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, இன்றைய நிலவரப்படி ஏராளமான இளைஞர்கள் நடிகர் விஜயின் பின்னால் நிற்கிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள் தான் பலர் ஆதரவாளராக இருக்கிறார்கள். நான் ஒருவருடன் பயணம் செய்து கொண்டிருந்தேன். அவர் அதிமுகவின் தீவிர தொண்டர்.
நாங்கள் செல்லும்போது அவர் மகள் படிக்கும் கல்லூரி வந்தது. அப்போது அவர் என்னிடம் கூறுகிறார் என் மகளுடன் சேர்த்து அவருடன் படிக்கும் 45 மாணவிகள் விஜயின் ஆதரவாளர்கள் என்றார். நான் உடனே இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் கிடையாது என்று சொன்னேன். தற்போதைய நிலவரப்படி ஏராளமான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் விஜய் பின்னால்தான் தான் இருக்கிறார்கள். ஒரு சிறிய குழந்தை கூட தன் அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சென்று விஜய்க்கு ஓட்டு போடுங்கள் என்று தான் சொல்லும் என்றார். அவரிடம் திமுக மற்றும் பாஜகவை பாசிசம் பாயாசம் என விஜய் விமர்சிக்கும் நிலையில் அவர் நேரடியாக விமர்சிக்காதது அவருக்கு பயமா என்று பேட்டி எடுத்தவர் கேட்கிறார். அதற்கு அவர் பெயர் சொல்லாமலேயே அவர்களை கதறவிட்டது தான் விஜய்யின் முதல் வெற்றி என்று கூறுகிறார். மேலும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
DMK / BJP ன்னு அவர் மென்ஷன் பண்ணாமயே கதற விட்டது தான் முதல் வெற்றி..!
இளைஞர்/பெண்கள்-ன்னு பெரிய படையே தளபதி பின்னாடி இருக்கு Peak Elevat ரா- @TVKVijayHQ 🗿📈🔥#தமிழகவெற்றிக்கழகம் pic.twitter.com/gy1bAs4P7D
— Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc 🧊🔥ᴸ ᴱ ᴼ (@vijay_mohammed) March 1, 2025