ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. ஓட்டு என்னும் மையமான சித்தோடு ஐ ஆர் டி டி பொறியியல் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு ஒவ்வொரு சுற்று முடிவிலும் பதிவான வாக்கு விவரங்கள் அறிவிக்கப்படும். காங்கிரஸ், அதிமுக,தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சி என இந்த தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.