மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தெற்கு ஈரானின் மினாப் (Minab) மாகாணத்தில் உள்ள ஒரு பெண் குழந்தைகள் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலில், இதுவரை 85 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) என்று பெயரிட்டுள்ளது.

​ஈரான் அதிபர் மற்றும் உச்ச தலைவர் காமேனியை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. “ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கி இஸ்ரேலை அழிக்க நினைக்கிறது, அதைத் தடுக்கவே இந்தத் தாக்குதல்” என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். இதற்குப் பதிலடியாக கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி வருவதால், போர் இன்னும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது.