ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமின்றி இந்தியாவின் சில பகுதிகளிலும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரானிய அரசு 40 நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ள நிலையில், ஈராக் 3 நாட்கள் துக்க தினத்தை அறிவித்துள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான், புனித நகரமான கோம் மற்றும் ஈராக்கின் பாக்தாத், கர்பலா ஆகிய நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு அழுது புலம்பித் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
People in Tehran’s Enghelab Square mourn the martyrdom of Ayatollah Khamenei
Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/9zVCOUIjKo
— Press TV 🔻 (@PressTV) March 1, 2026
“>
குறிப்பாக, அரசுத் தொலைக்காட்சிகளில் கமேனியின் மரணச் செய்தியை வாசித்த செய்தித் தொகுப்பாளர்கள் நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுதது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “அமெரிக்காவிற்கு மரணம், இஸ்ரேலிற்கு மரணம்” என்ற ஆக்ரோஷமான கோஷங்களுடன் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
#WATCH जम्मू-कश्मीर: श्रीनगर में कश्मीरी शिया मुसलमानों ने ईरान के सुप्रीम लीडर अयातुल्ला अली खामेनेई की हत्या के खिलाफ प्रदर्शन किया। अयातुल्ला खामेनेई इजरायल और US के हमलों में मारे गए थे। pic.twitter.com/cybIZRalCr
— ANI_HindiNews (@AHindinews) March 1, 2026
“>
இந்தத் துயரச் சம்பவம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல பகுதிகளில், கமேனியின் உருவப்படங்களை ஏந்தியபடி மக்கள் அமைதிப் பேரணிகளை நடத்தி வருகின்றனர். கமேனியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் கடைகள் அடைக்கப்பட்டு துக்கம் அனுசரிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Here is how pilgrims reacted to the news of Ayatollah Khamenei’s martyrdom at Imam Hussein holy shrine in Karbala.
Follow: https://t.co/mLGcUTS2ei pic.twitter.com/ynKQws2q5C
— Press TV 🔻 (@PressTV) March 1, 2026
“>
லெபனான், சிரியா போன்ற நாடுகளிலும் ஈரானுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இஸ்லாமிய நாடுகள் பலவும் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கமேனியின் குடும்ப உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதால், ஒட்டுமொத்த ஈரான் தேசமே தற்போது சோகக் கடலில் மூழ்கியுள்ளது.
