முன்னாள் போப் ஆண்டவரின் மரணம் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸின் ராஜினாமா ஆகியவற்றைத் துல்லியமாகக் கணித்த ‘புதிய பாபா வங்கா’ என்று அழைக்கப்படும் செலினா அவலோன், தற்போது ஈரான் போர் மற்றும் அமெரிக்க அரசியல் குறித்து வெளியிட்டுள்ள கணிப்புகள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தற்போது இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து செலினா கூறுகையில்,
“ஈரான் உச்ச தலைவர் கமேனி, அமெரிக்கப் படைகளால் படுகொலை செய்யப்படுவார். அவருக்குப் பின் பதவிக்கு வரும் ஒரு சர்வாதிகாரியின் ஆட்சியும் நீண்ட காலம் நீடிக்காது. அதன்பிறகு, 50-களில் இருக்கும் ஒரு ‘நெப்போலியன்’ போன்ற ஆக்ரோஷமான இளைஞர் ஈரான் தலைவராக வருவார். அவர் அமெரிக்காவுக்கு இணையாகப் பதிலடி கொடுப்பார். இது ஒரு ரத்தக்களரியான போராக மாறும்.
அமெரிக்க அரசியல் குறித்து அவர் வெளியிட்டுள்ள கணிப்பில், டொனால்ட் டிரம்ப் ஒரு ‘போர்க்காலத் தலைவராக’ இருப்பார் என்று கூறியுள்ளார். மேலும், டிரம்ப் மீது மீண்டும் ஒரு கொலை முயற்சி நடைபெறும் என்றும், உடல்நலக் குறைவு காரணமாக அவர் பதவியிலிருந்து விலக நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார். அவருக்குப் பிறகு ஜே.டி. வேன்ஸ் (JD Vance) அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பார் என அவர் கணித்துள்ளார்.
இந்தக் காலகட்டத்தை ‘மகா விழிப்புணர்வு’ என்று செலினா குறிப்பிடுகிறார். உலகம் ஒரு புதிய காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளதாகவும், மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளாவிட்டால் பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கிறார்.
ரோமானியப் பேரரசைப் போல அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்த ஒரு புதிய சாம்ராஜ்யம் உருவாகும் என்றும், போருக்குப் பிறகு ஈரானின் தோற்றம் துபாய் போல மாறி, பெரும் முதலீடுகள் குவியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் 11 வயது முதலே இத்தகைய கணிப்புகளைக் கூறி வரும் செலினா, தான் அனுபவ ரீதியாக உணர்வதை மட்டுமே கூறுவதாகவும், இது அறிவியல் பூர்வமானது என்றும் வாதிடுகிறார். இந்தக் கணிப்புகள் தற்போது உலக நாடுகளிடையே விவாதப்பொருளாக மாறியுள்ளன.
